‘போட்டியின் நடுவே பரபரப்பை ஏற்படுத்திய இஷாந்த் ஷர்மா’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

டெல்லி கேபிடல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 5 -வது லீக் போட்டியின் போது சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் மற்றும் டெல்லி வீரர் இஷாந்த் ஷர்மா ஆகியோர் திடீரென வாக்குவாததில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஐபிஎல் லீக் போட்டி இன்று(26.03.2019) டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து 20 ஓவரின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. 19.4 ஓவரின் முடிவில் 150 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக வாட்சன் 44 ரன்களும், தோனி 32 ரன்களும், ரெய்னா 30 ரன்களும் எடுத்துள்ளனர்.

அப்போது போட்டியின் நடுவே சென்னை வீரர் வாட்சனும், டெல்லி அணியின் வீரர்களான இஷாந்த் ஷ்ர்மா மற்றும் ரபடா ஆகியோர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

IPL, IPL2019, CSKVDC, WHISTLEPODU, YELLOVE, WATSON, ISHANT, VIRALVIDEO

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்