‘6 பந்துக்கு 15 ரன்கள்’.. ‘சூப்பர் ஓவரில் பட்டையை கிளப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

தென் ஆப்ரிக்கா-இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இம்ரான் தாஹிர் வீசிய சூப்பர் ஓவரால் தென் ஆப்ரிக்க அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த தென் ஆப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்தது. இதனைத் தொடந்து நடந்த ஒரு நாள் தொடரை தென் ஆப்ரிக்கா அணி 5-0 என்கிற கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கேப்டவுனில் நேற்று(19.03.2019) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. போட்டி சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி சூப்பர் ஓவரில் 14 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தென் ஆப்ரிக்க பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் சுழலில் சிக்கி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து தென் ஆப்ரிக்க அணி முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது.

IMRANTAHIR, SLVSSA, T20CRICKET, VIRALVIDEO

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்