“6 பந்து, 11 ரன்கள்”.. ‘சூப்பர் ஓவர் திக் திக் நிமிடங்கள்’.. பரபரப்பான முடிவு.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

பரபரப்பான சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் 10 -வது லீக் போட்டி இன்று(30.03.2019) டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடைர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. இதில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 ரன்களும், ஆண்ட்ரு ரசல் 62 ரன்களும் அடித்து அசத்தினர். மேலும் குறைந்த(568) பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 621 பந்துகளில் 1000 ரன்களை கிறிஸ் கெய்ல் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரீத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ப்ரீத்வி ஷா 99 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து 20 ஓவரின் முடிவில் டெல்லி அணி 185 ரன்களை எடுத்தது. இரு அணிகளும் ஒரே ரன்களை எடுத்திருந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர், ஒரு ஓவரின் முடிவில் 10 ரன்கள் எடுத்தனர். அதில் ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னில் அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ரபாடா வீசிய பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

IPL, IPL2019, KKRVDC, SUPEROVER, PRITHVI, RUSSELL, RABADA

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்