"அவங்க ஜெயிக்க எல்லாம் நோ சான்ஸ்!... கேப்டன் 'இத' பண்ணி வேணா வின் பண்ணலாம்"... 'அடித்துக்கூறி பிரபல வீரர் நக்கல்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக  நடந்துவரும் நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சீசனிலாவது ஐபிஎல் கோப்பையை வென்றுவிட வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கியுள்ள விராட் கோலியின் பெங்களூரு அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தும் கூட அந்த அணியுடன் சேர்ந்து ஆர்சிபி பிளே ஆப்பிறகு முன்னேறியுள்ளதே இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது.

அதாவது, நேற்றைய போட்டியில் டெல்லி அணி ஆர்சிபியை 18வது ஓவரின் 3வது பந்தில் வீழ்த்தியிருந்தால், இன்று நடக்கும் ஹைத்ராபாத் - மும்பை இடையிலான போட்டியின் முடிவிற்காக ஆர்சிபி அணி காத்திருக்க வேண்டி இருந்திருக்கும். ஆனால் டெல்லி அணி 19வது ஓவரில் வென்றதால் ஆர்சிபியைப் போலவே 14 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணியை விட ஆர்சிபி நெட் ரன்ரேட் அதிகமாக பெற்றுள்ளது. அதனாலேயே  இன்றைய போட்டியின் முடிவு தெரியும் முன்பே ஆர்சிபி பிளே ஆப் செல்ல தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையிலேயே விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்லாது என மைக்கேல் வான் உறுதியாக கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர், "ஆர்சிபி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா எனக் கேட்டால் கண்டிப்பாக முடியாது என்றே நான் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறேன். ஆனால் இது 2020 என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உலகமே எதிர்பாராததை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் என்ன நடக்குமெனத் தெரியாது. கோலி இடது கையில் பேட்டிங் ஆடிக் கூட ஆர்சிபிக்கு போட்டியை  ஜெயித்துக் கொடுக்கலாம்" என நக்கலாகத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்