'அடுத்து World Cup வேற வரப்போகுது'... 'பாத்துட்டே இருங்க இது நடக்கும்!'... 'முதல் போட்டிக்கு முன்பே அடித்துச்சொல்லும் பிரபல வீரர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான நடராஜன் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த விவிஎஸ் லக்‌ஷ்மண் தமிழக வீரர்  நடராஜனை மிகவும் பாராட்டி பேசியுள்ளார். நடராஜன் பற்றி பேசியுள்ள அவர், "ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு நடராஜன் தேர்வானதில் எனக்கு ஆச்சரியமில்லை. முதலில் வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடது கை பந்துவீச்சாளர் என்பதால் நடராஜன் இந்திய அணியில் முக்கிய சக்தியாக இருப்பார். அதனால்தான் அவரை அணியில் சேர்த்துள்ளனர் என நினைக்கிறேன்.

ஐபிஎல் தொடர் என்பதே சிறந்த வீரர்கள் ஆடும் சர்வதேசத் தொடரைப் போலத்தான். அதனால் ஐபிஎல் தொடரில் அவர் ஆட்டத்தைப் பார்த்த பிறகு கண்டிப்பாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறுவார் என்பதை உறுதியுடன் கூறுகிறேன். நடராஜன் களத்தை ஒழுங்காக அறிந்து, சரியான விதத்தில் பந்து வீசி சிறப்பாகச் செயல்படுவார். முன்னதாக புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் கலீல் அகமதுக்குப் பதிலாக நடராஜனை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். தற்போது அவர் அணியில் தவிர்க்க முடியாதவராக மாறிவிட்டார்.

நடராஜன் யார்க்கருக்குப் பெயர் பெற்றவராக உள்ளபோதும் அவர் இன்னும் பலவிதமான நுணுக்கங்களைத் தெரிந்தவர். அவற்றை ஐபிஎல் தொடரில் பயன்படுத்தவில்லை. புதிய பந்தில் விக்கெட் எடுக்கும் திறன் பெற்றவர் அவர். யார்க்கர்கள் வீசுவதுதான் மிகக் கடினம். அதையே சரியாக வீசும் தன்னம்பிக்கை நடராஜனுக்கு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் டி வில்லியர்ஸை அவர் வீழ்த்திய யார்க்கர்தான் மிகச் சிறந்தது.

அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. நீங்கள் இந்திய அணியைப் பார்த்தால், அதற்கு டெத் ஓவர்களில் நல்ல வீரர் ஒருவர் தேவை. முகமது ஷமி, நவ்தீப் சைனி போன்றவர்கள் டெத் ஓவர்களில் நம்பிக்கையுடன் பந்துவீசுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அதோடு நடராஜன் இடது கை பந்துவீச்சாளராக இருப்பதால் அவர்  இந்திய அணியின் முக்கிய சக்தியாக இருப்பார்" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்