'எனக்கு முன்னாடியே தெரியாது'...ஆனால்..'பெரிய தப்பு நடந்திருக்கு...'இதெல்லாம் நல்லதுக்கு இல்ல'!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

ஐபிஎல் சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஐபிஎல் தொடர்களில் கடும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.நேற்றைய போட்டியில் 'நோ பால்' என்பதை கணிக்க தவறியதால் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பெங்களூருவில் நடந்த ஏழாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.  ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடியது.அந்த அணியின் டிவிலியர்ஸ் அதிரடியாக விளையாடிய நிலையில்,பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள்எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனிடையே போட்டியின் இறுதி கட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற 1 பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.அப்போது மலிங்கா வீசிய கடைசி பந்தை டுபே எதிர்கொண்டார். அதில் அவர் ஒரு ரன் எடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ரீப்ளேவில் பாத்த போது மலிங்கா வீசிய கடைசி பந்து நோ- பால் என தெரியவந்தது.இதுக்குறித்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி அம்பயர்களிடம் முறையிட்டும்  எந்த பலனும்  இல்லாமல் போனது.

போட்டிக்கு பின்பு நடந்த சம்பவம் குறித்து பேசிய ரோஹித் ஷர்மா ''போட்டியின்போது நிச்சயம் எனக்கு அது தெரிந்திருக்கவில்லை.இது போன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல.இனிமேல் இது போன்று நடக்காது என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்