‘தனி ஒருவனாக’ நின்ற விராட் கோலி.. வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதற்குபின் பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 -வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டி இன்று(08.03.2019) ராஞ்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்திய வீரர்களுக்கு ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி விருந்து வைத்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 314 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. 48.2 ஓவரில் 281 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 95 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

TEAMINDIA, INDVSAUS, MSDHONI, VIRATKOHLI, PULWAMAMARTYRS, ARMYCAP

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்