'ஆஹா.. இத மறந்துட்டனே.. ஏண்டா சொல்ல வேணாமா?'.. வீரரின் ரன் அவுட் பரிதாபம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > Sports newsகடந்த 2011- ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வ போட்டிகளில் பை ரன்னர் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. எனினும் லோக்கல் மேட்ச்களில் ஆஸ்திரேலியாவில் பை ரன்னர் முறை பயன்படுத்தப்படுகிறது.
இந்த பை ரன்னர் முறையில் நடந்த கேலியான குளறுபடிதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருவர் தன்னுடன் கூட்டாக ரன் எடுப்பதற்கு இன்னொரு வீரர் தயாராக இருக்கிறார் என்பதை மறந்து, தானே ரன்னுக்காக ஓட முற்பட்டதால் ரன் அவுட் ஆகியுள்ள வைரலான சம்பவம் பெரும் பரபரப்பாகி வருவதோடு, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் ஷெஃபீல்ட் ஷீல்ட் என்கிற பெயரில் லோக்கல் கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக சிட்னியில் நடந்த போட்டியில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன.
இதில் நியூ சவுத் வேல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்பின்னர் ஸ்டீவ் ஓ கீஃப், தன்னால் ரன் ஓடமுடியாது என்றும், ஆனால் ரன் எடுக்கும் நோக்கில் ஓடவேண்டும் என்பதால், தனக்கு பை ரன்னர் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் முன்னமே கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு மாற்று ரன்னர் வழங்கப்பட்டார்.
ஒரு பாய்ண்ட்டில், பந்தை அடித்துவிட்டு, உணர்ச்சிவசப்பட்ட ஸ்டீவ் ஓ 'கீஃப் வேகவேகமாக ரன் ஓடத் தொடங்கியுள்ளார். அதாவது தனக்காக ரன் ஓட ஒரு ரன்னர் வழங்கப்பட்டு, அந்த புதிய ரன்னரும் கிரவுண்டில் இருக்கிறார் என்பதைக்கூட மறந்துவிட்ட ஸ்டீவ், ரன் ஓடத் தொடங்கி பாதியில்தான் சுதாரித்துள்ளார்.
ஆனால் சுதாரித்து என்ன பிரயோஜனம், அதற்குள் ஸ்டீவின் இந்த மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த எதிரணி வீரர்கள் சுதாரித்துக்கொண்டு, இதுதான் சமயம் என்று அவர்கள் ஸ்டீவை ரன் அவுட் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS