‘தளபதி’ விஜய்யின் வசனத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்.. வைரலான ட்வீட்!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான ரஸல் அர்னால்ட் விஜய் படத்தில் வரும் வசனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

‘தளபதி’ விஜய்யின் வசனத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்.. வைரலான ட்வீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரின் படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்கை திரையில் ரசிக்கவே ரசிகர்கள் கூட்டம் அலைபோதும்.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் விஜய் ஒரு படத்தில் பேசிய வசனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த படம் போக்கிரி. இந்த படத்தில் விஜய் வில்லன்களைப் பார்த்து, ‘எப்படி வந்தோம் என்பது முக்கியம் இல்லை, புல்லட் எப்படி இறங்கியது என்பதுதான் முக்கியம்’ என பேசிருப்பார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஸல் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வசனத்தை பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

RUSSELARNOLD, SLVSA, TEST, VIJAY

OTHER NEWS SHOTS