அடடே! ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயிலா?

முகப்பு > செய்திகள் > Sports news
By |

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 23ஆம் தேதி (நாளை) முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இப்போட்டிகளைப் பார்க்க வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

அடடே! ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயிலா?

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கு வசதியாக இந்த ரயில்கள் இயக்கப்படும்

வரும், மார்ச் 23 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெற இருக்கின்ற போட்டிகளை பார்க்க வசதியாக இயக்கப்படும் இரண்டு சிறப்பு ரயில்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 23 & மார்ச் 31

சென்னை பீச் - வேளச்சேரி
வேளச்சேரி - சென்னை போர்ட்

இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL2019, SOUTHERN RAILWAY

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்