திடீரென.. கோபத்தில் தொப்பி'ய தூக்கி வீச பாத்த 'ஜடேஜா'.. "அது மட்டும் நடந்திருந்தா சிஎஸ்கே தான் ஜெயிச்சிருக்கும் போல"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா கடுப்பாகிய வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 'Avengers' ஃபேனா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??.. தியேட்டர்'ல படம் பார்த்தே கின்னஸ் ரெக்கார்ட்.. Counts கேட்டதுக்கே தல சுத்துது..

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, ஐந்து போட்டிகள் வரை ஆடி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.

அதிலும், முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த சிஎஸ்கே, பெங்களூர் அணிக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் தான் வெற்றி பயணத்தை தொடங்கி இருந்தது.

ருத்துராஜ் அதிரடி

தொடர்ந்து, குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய சிஎஸ்கேவில், இதுவரை ஃபார்முக்கு வராமல் இருந்த தொடக்க வீரர் ருத்துராஜ், சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார் ருத்துராஜ். இருபது ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை சிஎஸ்கே எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, 48 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால், சிஎஸ்கே வெற்றி பெறும் என்றே பலரும் கருதினர்.

தனியாளாக போராடிய மில்லர்

ஆனால், டேவிட் மில்லர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவருடன் ஆறாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரஷீத் கானும் தன்னுடைய பங்களிப்பை அளிக்க, குஜராத் அணி வலுவானது. கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட, ஒரு பந்து மீதம் வைத்து போட்டியை முடித்து வைத்தார் மில்லர். 51 பந்துகளில் 94 ரன்கள் அடித்த மில்லர், ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

கடுப்பான ஜடேஜா, பிராவோ

இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் குஜராத் அணி தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், இந்த போட்டியின் போது திடீரென ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோர் கடுப்பான சம்பவம் தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மில்லர் மற்றும் ரஷீத் ஆகியோர் நிலைத்து நின்று ரன் சேர்க்க, போட்டி மெதுவாக குஜராத் பக்கம் மாறிக் கொண்டிருந்தது. அப்போது, 17 ஆவது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட மில்லர், அதனை மிட் டீப் விக்கெட் திசையில் அடித்தார். அப்போது, அங்கு ஃபீல்டிங் நின்ற ஷிவம் துபே, முதலில் ஓடி வந்து, பிறகு மெதுவாக  வந்து, பந்தை கேட்ச் பிடிப்பதற்கான பெரிய முயற்சிகளிலும் அவர் இறங்கவில்லை.

சிஎஸ்கே கூட ஜெயிச்சு இருக்கலாம்..

இது போக, அங்கிருந்த லைட்டும் அவர் கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது. ஷிவம் துபே கேட்ச் எடுத்து, மில்லரின் விக்கெட்டை சிஎஸ்கே எடுத்திருந்தால் போட்டியின் முடிவு கூட மாறி இருக்கும். ஆனால், ஷிவம் துபேயின் செயலைக் கண்டு, பிராவோ ஏமாற்றம் அடைந்தார். உடனடியாக ஃபீல்டிங் மாற்றவும் சைகை காட்டினார். இன்னொரு பக்கம், கேப்டன் ஜடேஜா கடுப்பில் தொப்பியை எடுத்து, கீழே வீசவும் முற்பட்டார்.

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | வீட்டு கேட்டில் இப்படி ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருக்கா.. அப்போ உடனே போலீசாரிடம் சொல்லிடுங்க.. நூதன முறையில் நடந்த துணிகரம்..!

 

CRICKET, IPL, CSK, SHIVAM DUBE, MILLER CATCH, BRAVO, JADEJA, DAVID MILLER, DWAYNE BRAVO, RAVINDRA JADEJA, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்