'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல வீரர்'...அதிரடி தடை விதித்த ஐசிசி...அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

ஊழல் குற்றசாட்டு தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து,இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா 2 ஆண்டுகள் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட தடை விதித்து,ஐசிசி உத்தரவிட்டுள்ளது.இது கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாகவே இலங்கை கிரிக்கெட் வாரியம் பல்வேறு ஊழல் பூகார்களில் சிக்கி தவித்து வருகிறது.அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா மீது பல்வேறு ஊழல் குற்றசாட்டுகள் அடுக்கப்பட்டன.ஆனால் அவர் மீதான விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இது தொடர்பாக ஐசிசிக்கு பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் விசாரணை மேற்கொண்டது.இந்நிலையில் திடீர் திருப்பமாக சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆல் ரவுண்டரான ஜெயசூரியா, 445 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிரடியாக விளையாடக்கூடிய அவர்,21 சதங்கள் மற்றும் 323 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றவர் ஜெயசூரியா. அவர், சர்வதேச போட்டிகளில் இருந்து 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

CRICKET, SRILANKA, SANATH JAYASURIYA

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்