'மும்பை இந்தியன்ஸ் உடையுடன்'... 'பாகிஸ்தான் தொடருக்கு போன வீரர்!'... 'பிளே ஆஃப்பில் கையில் இருந்ததை பார்த்து'... 'கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும்போது ஷெர்ஃபான் ரூதர்போர்ட் செய்த காரியம் ஒன்று பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் வீரர் ரூதர்போர்ட் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் துபாயிலிருந்து பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் டி20 ப்ரீமியர் லீக்கில் பங்கேற்க ரூதர்போர்ட் சென்றுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் டி20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லீக் ஆட்டங்களுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது  நடந்து வரும் ப்ளே ஆஃப் சுற்றில் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரூதர்போர்ட் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ஆனால் ரூதர்போர்ட் விளையாடும்போது கராச்சி கிங்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இதைப் பார்த்த ரசிகர்கள் கராச்சி கிங்ஸ் அணியைக் கிண்டல் செய்து ட்வீட் செய்து வருகின்றனர். ஒரு ரசிகர் ட்விட்டரில், "கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரூதர்போர்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸ் அணிந்து விளையாடுகிறார்" எனவும், மற்றொருவர், "உங்களுக்குத் தெரியுமா, மும்பை இந்தியன்ஸ் கிளவுஸை அணிந்து ரூதர்போர்ட், கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்" எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கிளவுஸை அணிந்து ரூதர்போர்ட் பாகிஸ்தானின் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடியது ட்விட்டரில் வைரலாக ரசிகர்கள் கராச்சி கிங்ஸ் அணி நிர்வாகத்தை கலாய்த்து தள்ளி வருகின்றனர். கடந்த வாரம் தூபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு ரூதர்போர்டு விளையாடச் சென்றபோது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்போர்ட்ஸ் கிட்டை அணிந்து அங்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்