"இப்போ எப்படி இருக்கு?".. தனது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு நெகிழ்ச்சியான ரிஷப் பண்ட்.. முழு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பண்ட், தனது உடல்நிலை  குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Jallikattu : “என் காளை தோத்துருச்சு!”.. கலங்கிய ‘குட்டி அன்னலட்சுமி’.. “சரி இந்தா என் பரிச நீயே வெச்சுக்க” - நெகிழவெச்ச மாடுபிடி வீரர்!   

இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில்  முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஹரித்வார் மாவட்டத்தின் மங்களூர் நகரில் உள்ள முகமதுபூர் ஜாட் என்ற இடத்தில் இந்த கார் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு  சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேக்ஸ் மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் ஆஷிஷ் யாக்னிக் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அந்த பேட்டியில் முதல் கட்ட சிகிச்சையில் கிரிக்கெட் வீரர் ரிஷப்புக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் நிலையாக இருப்பதாகவும் கூறினார்.

சில நாட்களுக்கு முன் ரிஷப் பண்ட், மும்பை கோகிலாபென் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முட்டியில் ஏற்பட்ட தசைநார் கிழிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கணுக்கால் தசை நார் கிழிவுக்கு அறுவை சிகிச்சை இன்னொரு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறுவை சிகிச்சை 3 மணிநேரம் நடந்தது என்று கூறப்படுகிறது. மருத்துவர் டின்சா பார்டிவாலா இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். தசைநார் கிழிவு சரியாக 8-9 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர் என டின்சா பார்டிவாலா கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது உடல் நிலை குறித்து ரிஷப் பண்ட் ஒரு நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், " உங்களின் அனைத்து ஆதரவுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நான் பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன், மேலும் நான் குணமடைந்து வருகிறேன். எனது உற்சாகம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நான் நன்றாக உணர்கிறேன், இந்த கடினமான நேரத்தில் உங்கள் அன்பான வார்த்தைகள், ஆதரவு மற்றும் நேர்மறை ஆற்றலுக்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்." என ரிஷப் அறிக்கையில் கூறியுள்ளார்.

Also Read | "தனா-க்கு ஒரு பிரச்சனைன்னா பொங்கிருவேன் நானு".. ஜாலியா ஆவேசமான DD.. "பிரச்சனை பண்றதே தனாவா இருந்தா? 😅"

RISHABH PANT, RISHABH PANT HEALTH CONDITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்