‘கடைசி ஓவரை விட இதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது’.. சாஹலுக்கு பதிலளித்த விஜய் சங்கர்!
முகப்பு > செய்திகள் > Sports newsஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து நாக்பூரில் நடந்த 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி என்கிற சாதனையை இந்தியா படைத்தது.
இப்போட்டியில் விளையாடிய தமிழக வீரரான விஜய் சங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழி சேர்த்தார். இதில் பேட்டிங் செய்து 46 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டிக்கு பின் சாஹல் டிவிக்கு விஜய் சங்கர் அளித்த பேட்டியில், ‘உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது கஷ்டமா? இல்லை ஹிந்தி பேசுவது கஷ்டமா?’ என்ற கேள்வியை இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கேட்க, அதற்கு ஹிந்தியில் பேசுவதுதான் கஷ்டம் என விஜய் சங்கர் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'மாஸ் என்ட்ரி கொடுத்த தல'...'கெத்து காட்டிய தளபதி கோலி'...தெறிக்க விடும் 'ஐபிஎல் வீடியோ'!
- ‘பும்ராவை போல் பந்து வீசி அசத்திய சிறுவன்’.. வைரலான வீடியோ!
- 2 விக்கெட்.. 11 ரன்கள்.. கடைசி நேரத்தில் இவர் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறந்த விஜய் சங்கர்!
- ‘அவருக்கான ப்ளான் மாறுனதுக்கு தோனியும் ரோஹித்தும்தான் காரணம்’.. அதிரவைத்த கோலி!
- மிரட்டிய பும்ரா.. அசத்திய விஜய் சங்கர்.. த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
- ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான தமிழக கிரிக்கெட் வீரர்! .. அப்படி என்ன செய்தார்?
- மைதானத்தில் ‘தல’தோனியை துரத்திய ரசிகர்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!
- ‘இந்த 40வது சதம் எனக்கு வெறும் நம்பர்தான்.. ஆனா இந்திய அணிக்கு?’.. உணர்ச்சிமிக்க பேசிய கோலி !
- உலகக் கோப்பையை காணச் செல்லும் அனுஷ்கா: வெளியில் சொன்ன திருமண ரகசியங்கள்!
- 33 ரன்களில் வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கும் 'தல' தோனி!