‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது.
பரபரப்பாக நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கூடுதலாக சில அணிகளுக்கு இருந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கும் ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்பு இருந்தது. அப்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸித் அலி, “இங்கிலாந்து மற்றும் பிற அணிகளுடன் இந்தியா வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறாமல் பார்த்துக்கொள்ளும்” எனக் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி தற்போது பிசிபி வட்டாரங்கள் கூறும்போது, “பாஸித் அலி ஒரு டெஸ்ட் வீரராக இருந்தவர். வாரியத்தின் பல்வேறு திட்டங்களில் இருந்துள்ள அவர் இதுபோன்ற பொறுப்பற்ற அலட்சியமான கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அவருடைய கருத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற கருத்தைக் கூறியதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கின்றன.
மேலும் கராச்சி பிராந்திய அணியின் பயிற்சியாளராக அவரை நியமிக்க இருந்ததையும் தற்போது மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'!
- இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’
- ‘பல பெண்களுடன் பேசிய சாட்டிங் லீக்'... 'சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் வீரர்'!
- 'வா தல.. வா தல'.. அதே எனர்ஜி.. அப்டியே போறோம்.. விண்டீஸ தட்டி.. தூக்குறோம்.. வைரல் வீடியோ!
- 'நா வந்துட்டேன்னு சொல்லு'.. 'நானா விளையாடுறேன்.. தானா விளையாடுது கை'.. வைரல் வீடியோ!
- ‘உலக சாம்பியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... '85 ரன்னில் சுருண்ட பரிதாபம்'!
- ‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
- ‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..!
- 'இத ரன் அவுட்னு சொல்றதா.. நாட் அவுட்னு சொல்றதா.. என்னனு சொல்றது'?.. சச்சினின் வேற லெவல் ட்வீட்!
- ‘என் வாழ்க்கையின் சிறந்த, மோசமான நாள் அது’... ‘இன்ஸ்டாகிராமில் உருகிய வீரர்’!