‘அவர சாதரணமா நினைக்காதீங்க’.. ‘அவரோட அனுபவம் ரொம்ப முக்கியம்’..தோனி குறித்து கூறிய முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > Sports newsஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான தோனியை குறைத்து மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பறிகொடுத்தது. இதில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் தோனிக்கு ஓய்வளிக்கப்படிருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. அப்போது தோனி போன்ற அனுபவமிக்க வீரர் இல்லாததே தோல்விக்கான காரணம் என பலரும் தங்களது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தோனியின் முக்கியத்துவம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,‘தோனியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். மிடில் ஆர்டரில் விளையாட இவர் போன்ற அனுபவமிக்க வீரர் தேவை’ என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'தோனி இருந்தா இந்தியா ஜெய்ச்சிடுமா'?...அவர் மேல என்ன 'காண்டு'...வீரரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
- 'ஸ்டெம்ப்க்கு பின்னாடி அவர் இல்ல '...இப்ப வந்து 'கொய்யோ மொய்யோனு அழுது'... என்ன ஆக போகுது!
- ‘முக்கிய 2 மாற்றங்கள்’.. தொடரைக் கைப்பற்ற போகும் அணி?.. பரபரப்பான கடைசி ஒருநாள் போட்டி!
- 'இது சின்ன தல வெர்சன்'...என்ன விசில் போடலாமா?...இணையத்தில் பட்டையை கிளப்பும் வீடியோ!
- பாதி கேப்டன் தோனிதான்.. கோலி ரொம்ப சிரமப்படுகிறார்.. கருத்து கூறிய முன்னாள் வீரர்!
- தலைவன் இருந்திருந்தா.. வீ மிஸ் யூ தோனி.. டுவிட்டரில் தெறிக்கவிட்ட‘தல’!
- ‘ஆர்மி தொப்பி அணிந்து விளையாடியது தவறு’.. ஐசிசி -யிடம் பாகிஸ்தான் புகார்!
- ஆமா!...இப்போ வந்து சொல்லுங்க,அவர் இருந்திருந்தா நல்லா இருக்கும்னு...டென்ஷன் ஆன இந்திய வீரர்!
- 'பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ''தோனி'' ஆக முடியாது'...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ!
- அதிரடியான 4 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி!