உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறோமா?.. மனம் திறந்த விராட் கோலி!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளால் நடந்த தாக்குதலில் 40 -க்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு காரணம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்புதான் என இந்தியா குற்றம் சாட்டியது. இதனை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அணி உலகக் கோப்பையில் விளையாடக் கூடாது என பலரும் கோரிக்கைகள் வைத்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், கங்குலி போன்றோர் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடவில்லை என்றால் இரண்டு புள்ளிகளை இழந்துவிடும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆனால் பிசிசிஐ நிர்வாகம், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என தெரிவித்தது. இதனை அடுத்து நேற்று நடந்த மத்திய அரசு உடனான பிசிசிஐ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘புல்வாமா தாக்குதலில் உயிரிந்த துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவது குறித்து இந்திய அரசும், பிசிசிஐ எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என அவர் கூறியுள்ளார்.

VIRATKOHLI, TEAMINDIA, INDVPAK, ICC, BCCI, WORLDCUP2019

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்