“காயப்பட்ட சிங்கத்தின் கர்ஜணை”..மிரட்டிய வார்னர்.. மிரண்டு போன வீரர்கள்.. டிரெண்டான வீடியோ!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

ஐபிஎல்  ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசனின் முதல் போட்டி நேற்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற 17.1 ஓவரின் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 71 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரின்  முடிவில் 71 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று(24.03.2019) கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்.

இதில் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த தமிழக வீரரான விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 20 ஓவரின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

IPL, IPL2019, SRHVSKKR, ORANGEARMY, WARNER

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்