"அந்த எடம் எப்போவும் தோனிக்கு தான்... யாரும் அத தொட முடியாது!!!"... 'ஜாம்பவான் சொன்ன லிஸ்ட்'... 'மிஸ்ஸான முக்கிய வீரர்?!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தன் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணிக்கு முதல் ஒருநாள் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், 11 வீரர்கள் கொண்ட சிறந்த இந்திய ஒருநாள் அணியை பட்டியலிட்டுள்ளார். கபில் தேவ் தேர்வு செய்துள்ள அணியின் துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் உள்ளனர். அவர்களோடு தற்போது உள்ள வீரர்களில் இருவரை மட்டுமே கபில் தேவ் தேர்வு செய்துள்ளார்.  மூன்றாம் இடத்தில் விராட் கோலிக்கு அடுத்து மிடில் ஆர்டரில் ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக விக்கெட் கீப்பரை தேர்வு செய்த கபில் தேவ், தோனி பெயரை கூறியுள்ளார். அப்போது தோனி இடத்தை யாராலும் தொட முடியாது எனவும் தனியாக குறிப்பிட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களில் ஜாகிர் கான், ஸ்ரீநாத்தை தேர்வு செய்துள்ள அவர் அடுத்து பும்ராவை தேர்வு செய்துள்ளார். அவர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கபில் தேவுக்கு பின் பெரிய அளவில் வேகப் பந்துவீச்சில் முத்திரை பதித்த வீரர்கள் இவர்கள் மூவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்துவீச்சாளர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்துள்ள கபில் தேவின் அணியில் உள்ள எட்டு வீரர்கள் 2000 முதல் 2010 வரை இந்திய அணியில் உச்சத்தில் இருந்தவர்களே ஆகும். கபில் தேவ் தேர்வு செய்துள்ள அணி வீரர்கள் - சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், விராட் கோலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், ஸ்ரீநாத், பும்ரா. இந்த அணியில் சவுரவ் கங்குலிக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்