'எவ்ளோ சொல்லியும் கேக்காம Risk எடுக்கும் ரோஹித்'... 'எல்லாம் இதுக்காக தானா?!!'... 'விரைவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு?!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து வலை பயிற்சி மேற்கொள்வது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதற்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், மருத்துவ குழுவின் அறிவுரையின் படியே இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரை சோதித்த மருத்துவ குழுவும், ரோஹித் சர்மா இன்னும் சில நாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆட கூடாது, ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. அப்படி அவர் மீண்டும் களத்திற்கு வந்தால் காயம் பெரிதாக வாய்ப்புள்ளதாகவும், அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரோஹித் சர்மாவை ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். ரோஹித் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, "ரோஹித் சர்மா அவசரமாக களத்திற்கு திரும்ப வேண்டும் என நினைக்க கூடாது. நான் காயத்தோடு ஆடியதாலேயே என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டது. என்னை போன்ற நிலைமை உங்களுக்கும் ஏற்பட கூடாது. அதனால் தேவையான அளவு ஓய்வு எடுங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் ரோஹித் சர்மா இந்த அறிவுரை எதையும் கேட்காமல் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும் நேற்று நீண்ட நேரம் ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் ஆட வேண்டும் எனவே ரோஹித் சர்மா இப்படி பயிற்சி மேற்கொள்வதாகவும், ஆனால் இதனால் காயம் பெரிதாகி அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய உடல்நிலையை பிசிசிஐ கண்காணிக்க துவங்கியுள்ளது. அதேநேரம் மும்பை அணியின் பிஸியோவும் ரோஹித் சர்மாவை கண்காணித்து வரும் நிலையில், விரைவில் அவருடைய உடல்நிலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்