"அவர மட்டும் இறக்கியிருந்தா... நேத்து போட்டியே மாறிருக்கும்"... 'தமிழக வீரருக்காக'... 'சப்போர்ட்டுக்கு வந்த சச்சின்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஒருவரை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அதிலும் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணிக்காக மெதுவாக விளையாடிக் கொண்டு இருந்த ராகுல் திவாதியா கடைசி நொடியில் அதிரடி காட்டினார். பஞ்சாப் அணியின் பவுலிங் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் கடைசி கட்டத்தில் மிக மோசமாக சொதப்பியது. பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் மட்டுமே கொஞ்சம் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார்கள். அதிலும் ஸ்பீட் பவுலர்களின் பந்துகளை பிரித்து எடுத்த ராகுல் திவாதியா, சஞ்சு சாம்சன் இருவரும் ஸ்பின் பவுலிங்கில் நேற்று கொஞ்சம் நிதானம் காட்டினார்கள்.

குறிப்பாக நேற்று பஞ்சாப் அணிக்காக பவுலிங் செய்த முருகன் அஸ்வின் அதிக கவனம் ஈர்த்தார். பெங்களூர் மற்றும் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் முருகன் அஸ்வினின் லெக் ஸ்பின் பஞ்சாப் அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அதனால் முருகன் அஸ்வின் பவுலிங் நேற்று போட்டியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவருக்கு நேற்று இரண்டு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதிலும் இரண்டாவது ஓவரில் 3 பந்துகள் போடும் போதே போட்டி முடிந்துவிட்டது.

நேற்று மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தபோதும் முருகன் அஸ்வினுக்கு கே.எல் ராகுல் ஓவர் கொடுக்கவில்லை. முருகன் அஸ்வினுக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் ராகுல் திவாதியா விக்கெட் விழுந்திருக்கும். போட்டியே மாறி இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சன் டெண்டுல்கரும் முருகன் அஸ்வினுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

இதுகுறித்து சச்சின் பகிர்ந்துள்ள டிவீட்டில், "ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்மித், சஞ்சு சாம்சன், திவாதியா எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள். அதிரடியாக ஆடி மெகா சேஸிங்கை செய்துள்ளனர். கூலாக டென்ஷன் இல்லாமல் விளையாடினார்கள். நேற்று பஞ்சாப் அணியின் பாஸ்ட் பவுலர்கள் சரியாக யார்க்கர் வீசவில்லை. அதேபோல நன்றாக பவுலிங் செய்த முருகன் அஸ்வினை கேப்டனும் முழுமையாக பயன்படுத்தவில்லை" எனக் கூறியுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்