'வெளில பார்க்க வேணும்னா'... 'அவரு சிரிச்சுட்டு இருக்காருன்னு தோணலாம், ஆனா... 'மௌனம் கலைத்த கங்குலி!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி  முதல்முறையாக தற்போது மௌனம் கலைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நடப்பு ஐபிஎல் தொடர் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி முதல்முறையாக தற்போது அதுகுறித்து பேசியுள்ளார். நடப்பு தொடர் குறித்து பேசியுள்ள கங்குலி, "இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இந்த தொடரில் எல்லாமே இருக்கிறது. இதுதான் சிறந்த போட்டி, இவர்தான் சிறந்த வீரர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நிறைய விஷயங்கள் இந்த தொடரில் உள்ளது.

கே.எல் ராகுல், தவான், மயங்க் அகர்வால் போன்ற இந்திய அணி வீரர்கள் மிக சிறப்பாக இந்த தொடரில் ஆடி வருகிறார்கள். அதிலும் இந்திய பவுலர்கள் சமி, பும்ரா போன்றவர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். சில சூப்பர் ஓவர் போட்டிகள் எல்லாம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ரபாடா, ஆன்ரிச் நோட்ர்ஜ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இந்த சீசன் ஒரு வாவ் சீசனாக உள்ளது என்றுதான் கூற வேண்டும்.  ஒரு போட்டிதான் நன்றாக இருந்தது என்று கூற முடியாது. எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது. நிறைய புதிய திறமைகள் இந்த தொடரில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர் திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது. சில முக்கியமான வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் பல அணிகள் குழம்பி போய் உள்ளது.

முக்கியமாக கெயில் போன்ற வீரர்கள் கூட பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டனர். கெயில் வெளியே பார்க்க சிரித்தபடி நடந்து செல்வது போல இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை. பெஞ்சில் உட்கார வைத்து அவரை சீண்டி விட்டனர். அதனால்தான் அவர் சிறப்பான கம்பேக் கொடுத்தார். தன்னை பெஞ்சில் உட்கார வைத்ததற்கு பதிலடி கொடுத்தார். இந்த சீசனில் அணி நிர்வாகங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்