"மிகவும் எதிர்பார்க்கப்பட்ட... 'மேட்ச் வின்னர்' வீரர் அணியில் சேர வாய்ப்பு?!!" - இனிமேல் வெற்றி மேல் வெற்றிதானா, சென்னை அணிக்கு???

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய போட்டியில் மிக முக்கியமான வீரர் ஒருவர் சிஎஸ்கே அணியில் சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சிஎஸ்கே அணிக்கான தொடர் தோல்வி குறித்து பேசியிருந்த பயிற்சியாளர் பிளமிங், "எங்களுடைய அணியில் ஸ்பின் பவுலிங் சரியாக இல்லை. எப்போதும் நாங்கள் ஸ்பின் பவுலிங்கை நம்பியே களமிறங்குவோம். எங்களுக்கு எப்போதும் ஸ்பின் பவுலர்கள்தான் விக்கெட் எடுப்பார்கள். ஆனால் இந்த சீசனில் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங் பலன் அளிக்கவில்லை. இந்த முறை சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர்களாக ஸ்பின் பவுலர்கள் இல்லை. சிஎஸ்கேவின் தோல்விக்கு ஸ்பின் பவுலர்களும் ஒருவகையில் காரணம்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு முன் விளையாடிய சீசன்களில் சிஎஸ்கேவிற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும்தான் விக்கெட்டுகளை எடுத்தனர். 2018க்கு பிறகு சிஎஸ்கேவிற்கு இம்ரான் தாஹிர், ஹர்பஜன் இருவரும்தான் விக்கெட்டுகளை எடுத்தனர். அதேபோல் ஜடேஜாவும் அதிக விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக 2019 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இம்ரான் தாஹிர்தான் இருந்தார். அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை இம்ரான் தாஹிர் எடுத்ததால்தான் மும்பை, ஹைதராபாத் போன்ற வலுவான அணிகளை கூட எளிதாக வென்று சிஎஸ்கே பைனல் செல்ல முடிந்தது.

ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கேவில் ஏற்கனவே டு பிளசிஸ், வாட்சன் , பிராவோ, சாம் கரன் என 4 வெளிநாட்டு வீரர்கள் உள்ளதால் இம்ரான் தாஹிரால் விளையாட முடியவில்லை. இதனால் கடந்த 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இம்ரான் தாஹிர் விளையாடவில்லை. இதையடுத்து தற்போது இம்ரான் தாஹிரை அணியில் மீண்டும் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் சிஎஸ்கே திணறும் நிலையில், அணிக்குள் இம்ரான் தாஹிர் வந்தால் கண்டிப்பாக சிஎஸ்கே மீண்டும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அதேபோல் எதிரணியை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்த முடியும்.

அதேநேரம் சாம் கரன் முதல் போட்டியில் கொஞ்சம் நன்றாக ஆடினாலும், அதன்பின் எந்த போட்டியிலும் அவருடைய பேட்டிங், பவுலிங் எதுவும் சரியாக இல்லை. இதைத்தொடர்ந்து சிஎஸ்கேவில் இன்று சாம் கரன் விளையாட வாய்ப்பு இல்லை எனவும், அவருக்கு பதிலாக தாஹிரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இன்றைய போட்டியில் சாம் கரன் அல்லது இம்ரான் தாஹிர் இருவரில் ஒருவர் களமிறங்கலாம் அல்லது சாம் கரன் நீக்கப்படவில்லை என்றால் பிராவோவை நீக்கிவிட்டு அவருடைய இடத்தில்கூட இம்ரான் தாஹிர் ஆட வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்