'அவ்ளோ கத்தியும் தப்பிச்ச கேப்டனால்'... 'மிஸ்ஸான பழிதீர்க்கும் பிளான்?!!'... 'போட்டிக்கு நடுவே பரபரப்பை எகிற வைத்த சம்பவம்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் - பெங்களூர் அணிகள் இடையேயான விறுவிறுப்பான போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்று அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவின் பேட்டிங் மோசமாக அமைந்ததால் அந்த அணியால் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூர் அணியின் பேட்டிங்கில் ஏபி டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தபோது 10வது ஓவரின் 4வது பந்தை ஷாபாஸ் நதீம் நோ பாலாக வீச, அதற்கு ஃப்ரீ-ஹிட் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து மொயீன் அலி அந்தப் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்தான அந்த  ஃப்ரீ-ஹிட் பந்தை கவர் திசையில் அடித்து ஒரு ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது ரஷித் கான் நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவரை அவுட் செய்தார். அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், ஃப்ரீ-ஹிட் என்பதில் ஒரு பேட்ஸ்மேன் கேட்ச், எல்பிடபுள்யூ அல்லது பவுல்டு அவுட் ஆனாலும் அவுட் ஆக கருதப்படாது. அந்த பந்தில் பேட்ஸ்மேன் ரன் அவுட் மட்டுமே ஆக முடியும். இப்படி கிரிக்கெட்டின் அரிதான ஒரு முறையில் ரன் அவுட் ஆனதால் ஆர்சிபி அணி ரசிகர்கள் கிண்டலுக்கு ஆளானது.

இந்நிலையில் மொயீன் அலி ஆட்டமிழந்ததை பார்த்த ஏபி டிவில்லியர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னருக்கும் அதே போல ஷாக் கொடுக்க முயற்சி செய்த சம்பவமும் நேற்று நடந்துள்ளது. பின்னர் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தபோது வாஷிங்டன் சுந்தர் ஒரு பந்தை நோ பாலாக வீச அடுத்து ஒரு ஃப்ரீ-ஹிட் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் செய்ய, ஸ்டம்புக்கு பின்னிருந்த விக்கெட் கீப்பர் ஏபி டிவில்லியர்ஸ் டேவிட் வார்னரை ரன் அவுட் செய்யுங்கள் எனக் கத்தினார். ஆனால் டேவிட் வார்னர் வருவதற்குள் தேவதத் படிக்கலால் பந்தைப் பிடித்து அவுட் செய்ய முடியாமல் போக, அந்த அரிதிலும் அரிதான சம்பவம் நேற்று நடைபெறாமல் போனது. இதைத்தொடர்ந்து மொயீன் அலி ரன் அவுட்டுக்கு பழி தீர்க்க துடித்த ஏபி டிவில்லியர்ஸின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்