'11வது ஓவர்லதான் எங்களுக்கே தெரியும்'... 'போட்டி கைவிட்டு போய்டுச்சுன்னு நெனச்சப்போ'... 'கோலி சொன்ன சீக்ரெட்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய போட்டியில் டெல்லியிடம் தோல்வியடைந்தபோதும் ஆர்சிபி அணி பிளே ஆப்ஸிற்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 152 ரன்களே அடிக்க, பின்னர் பிளே ஆப்ஸ் செல்ல எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என ஆர்சிபி பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் தவான், ரஹானே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆர்சிபி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரன்ரேட் அடிப்படையில்தான் ஆர்சிபி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கான அளவுகோல் என்ன என்பது தெரியாமல் இருந்தது. இறுதியிலேயே 17.3 ஓவருக்குள் டெல்லி வெற்றி பெறாவிடில் ஆர்சிபி தோல்வியடைந்தாலும் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் டெல்லி அணி 19வது ஓவரில் வென்றதால் ஆர்சிபியைப் போலவே 14 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணியை விட ஆர்சிபி நெட் ரன்ரேட் அதிகமாக பெற்று பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.3 ஓவருக்குள் வெற்றி பெறுவதில் இருந்து தடுத்தால் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் டெல்லி பேட்டிங்கின்போது ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு 11 ஓவர்கள் முடிந்த நிலையில்தான் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அப்போது டெல்லி அணி 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிப் பேசியுள்ள விராட் கோலி, "நேற்றைய போட்டியில் 11வது ஓவரின்போதுதான் டெல்லி 17.3 ஓவரில் வெற்றி பெற விடக்கூடாது என அணி நிர்வாகம் தெரிவித்தது. போட்டி எங்கள் கையில் இருந்து சென்ற பின்னர் கூட, மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்