"முதல்ல அவர தூக்குங்க... அந்த டீம் தானா தேறிடும்"... 'CSK தொடரிலிருந்தே வெளியேற'... 'அப்படியே Focus-ஐ திருப்பிய கம்பீர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமில்லாமல் அணியில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித் விலக வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் அணி மோசமாக சொதப்பி வரும் நிலையில், அதை கம்பீர் கடுமையாக விளாசியுள்ளார். முன்னதாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் சரியில்லை, கேப்டன் தோனி சரியாக ஆடவில்லை என விமர்சித்துவந்த கம்பீர் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், தற்போது ராஜஸ்தான் அணியின் பக்கம் திருப்பியுள்ளார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமில்லாமல் அணியில் இருந்தும் ஸடீவ் ஸ்மித் விலக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், "ராஜஸ்தான் அணியின் ஒரே பிரச்சனை ஸ்மித்தான். அவர் அணியில் எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் அணியில் இருந்து வெளியேற வேண்டும். இதற்கு பதிலாக வேறு வெளிநாட்டு வீரர் உள்ளே வர வேண்டும். வெளிநாட்டு பவுலர் அணிக்குள் வர வேண்டும். முதல் நாளில் இருந்தே இதைதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஸ்மித் வெளியேறினால் அணியின் பவுலிங் ஆர்டர் இன்னும் வலிமையாகும்.

தாமஸ் போன்ற வெளிநாட்டு பவுலர்களை அணிக்குள் கொண்டு வரலாம். இன்னொரு பவுலர் உள்ளே வந்தால் ஜோப்ரா ஆர்ச்சர் பவர் பிளேவில் கூடுதலாக ஓவர் வீச முடியும். இது ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பல போட்டிகளில் தொடக்கத்தில் ஆர்ச்சருக்கு ஓவர் கொடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி திணறியது. அது மாற வேண்டும் என்றால் ஸ்மித் வெளியேற வேண்டும். ராஜஸ்தான் அணியில் கேப்டன்சி செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஸ்மித்தான் தற்போது இருக்கும் பார்மிற்கு வெளியேற வேண்டும்" என விளாசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்