"பாவம் அவரு... இந்த வருஷம் ரொம்பவே பட்டுட்டாரு... சென்னையிலிருந்து வந்தும்"... 'அதிரடி வீரர் குறித்து தோனி உருக்கம்!!!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு தொடரில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வந்த சிஎஸ்கே அணி நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பெங்களூர் 145 ரன்கள் எடுக்க, அதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஒப்பனர் ரூத்துராஜ் அதிரடியாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே 18.4 ஓவரிலேயே 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ள கேப்டன் தோனி, "இது ஒரு முழுமையான போட்டியாக இருந்தது. எல்லாம் நாங்கள் திட்டமிட்டப்படி நடந்தது. எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடிந்தது.

எங்களால் போதுமான இடைவெளியில் விக்கெட் எடுக்க முடிந்ததால் எதிர்பார்த்ததை விட குறைவான ரன்களில் பெங்களூர் அணியை சுருட்ட முடிந்தது. வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. இந்த பிட்ச் ஸ்லோ பிட்ச். இதில் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினோம். ஆனால் ஸ்பின் பவுலர்கள் நேற்று நன்றாக பவுலிங் செய்தனர். டெத் ஓவர்களில் இதுவரை சிஎஸ்கே சரியாக ஆடாததுதான் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் இந்த தொடரில் அவ்வளவு சிறப்பாக இல்லை.

ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் சிறப்பாக இருந்தது. ரூத்து நன்றாக ஓப்பனிங் செய்தார். அவர் சிறப்பாக ஆடினார். அவர் பெரிய ஷாட்களை அடிப்பதை விட தனக்கு பிடித்த ஷாட்களை அடிக்க முயன்றார். அது அவருக்கு கை கொடுத்தது. இது போன்ற சமயங்களில் சிரிப்பதுதான் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். நாங்கள் பிளே ஆப் செல்ல போவது இல்லை. இனி வரும் போட்டிகளை என்ஜாய் செய்து அனுபவித்து ஆட முடியும். மைதானத்திற்கு சென்று டென்ஷன் இல்லாமல் ஆடுங்கள் என்று வீரர்களிடம் சொல்ல முடியும். சிஎஸ்கே வீரர்கள் தங்களால் முடிந்ததை செய்தார்கள். ரூத்து நன்றாக ஓப்பனிங் செய்தார்.

ரூத்துராஜுக்கு இந்த வருடம் மிக மோசமாக இருந்தது. அவர் சென்னையில் இருந்தார். அதன்பின் இங்கே வந்தவுடன் கொரோனா வந்தது. கூடுதலாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் அவர் சரியாக ஆட முடியவில்லை. நீங்கள்தான் உங்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். ரூத்துராஜ் அதை சிறப்பாக செய்தார். முதல் சிங்கிள் எடுத்த பின் ரூத்துராஜ் சிறப்பாக பேட்டிங் செய்தார். போட்டியில் போக போக அவர் நம்பிக்கை பெற்றார். அந்த நம்பிக்கைதான் அவருக்கு இந்த போட்டியில் உதவியது" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்