"இதுலதான் திணறிட்டு இருந்தாங்க, ஆனா இனி"... 'போட்டோவுடன் குட் நியூஸ் சொன்ன டீம்'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள அறிவிப்பு!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில்  ரசிகர்கள் இல்லாதபோதும், பரபரப்புக்கு குறைவின்றி தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக தந்தை உடல்நிலை காரணாமாக நியூசிலாந்து சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டிகளிலும் இதுவரை பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய உள்ளார். இதையடுத்து சரியான ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் நடுவரிசையில் திணறிவரும் ராஜஸ்தான் அணி ஸ்டோக்ஸ் வருகையால் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுப்பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தன் ட்விட்டர் பக்கத்தில், பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ரூ 12.5 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இதுவரை 67 டெஸ்ட், 95 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கியக் காரணமாக அமைந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்