'எத்தன டிவிஸ்ட்டு?!!'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல!!!'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 47 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான அணிகள் இதுவரை 12 போட்டிகளில் ஆடி முடித்துள்ளபோதும் இன்னும் பிளே ஆப் செல்லும் அணிகள் எவை என கண்டுபிடிக்க முடியாத சூழலே உள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் இந்த வார இறுதியில் மிக முக்கியமான மாற்றங்கள் நடக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

அடுத்ததாக ராஜஸ்தான் அணிக்கும் மைனஸ் ரன்ரேட் காரணமாக பிளே ஆப் வாய்ப்பு பெரிய அளவில் இல்லாத நிலையில், பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் பிளே ஆப் செல்வதற்கான போட்டி கடுமையாக நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் மிக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்று பிளே ஆப் ரேஸில் தற்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 5ல் வென்று பிளே ஆப் ரேஸில் உள்ளது.

ஹைதராபாத் அணி ஒருவேளை அடுத்த 2 போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று, மற்ற அணிகள் தோல்வி அடைந்தால் ஹைதராபாத் அணி பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. அதே சமயம் பஞ்சாப், கொல்கத்தா இரண்டு அணிகளும் 12 போட்டியில் 6ல் வென்று பிளே ரேஸில் உயிர்ப்புடன் உள்ள நிலையில், இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்று பிளே ஆப் செல்ல அதிக வாப்புள்ளது. இந்த நிலையில்தான் இந்த வாரம் போட்டியில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி அடுத்தடுத்து நடக்கும் 2 போட்டிகளில் விளையாடவுள்ள மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகள் 2ல் ஏதாவது ஒரு போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் அந்த அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை இழக்கலாம். இன்று நடக்கவுள்ள மும்பை மற்றும் பெங்களூர் இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியே பிளே ஆப் செல்லும். அதேநேரம் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி டெல்லியை எதிர்கொள்ளும் போது கண்டிப்பாக வென்றாக வேண்டும்.

இதன் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூர் அணிகளில் ஒரு அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தால் கூட ஆச்சர்யமில்லை எனக்  கூறப்படுகிறது. அதாவது இன்று மும்பை அணி பெங்களூரிடம் தோல்வி அடைந்து, அதன்பின் டெல்லியிடம் தோல்வி அடைந்தால் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை இழக்கலாம். அதேபோல பெங்களூர் அணி இன்று தோல்வி அடைந்து டெல்லியிடம் தோல்வி அடைந்தால்  பிளே ஆப் வாய்ப்பை இழக்கலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்