‘இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்’.. ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி கைது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துசார் அரோத் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான துசார் அரோத் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பயிற்சியாளாராக இருந்துள்ளார். அணியில் உள்ள சில முன்னணி வீரர்களுக்கு இவரை பிடிக்காததால் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து துசார் அரோத் விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக துசார் அரோத் இன்று போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி தெரிவித்த டி.ஜி.பி ஜெய்தீட்ச்சிங் ஜடேஜா,‘ஆல்காபுரியில் உள்ள கபே பகுதியில் ஐபிஎல் சூதாட்டம் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு செல்போன்கள் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட துசார் அரோத் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய நேற்றைய போட்டியில் பெட் கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சூதாட்டத்தில் பல கல்லூரி மாணவர்கள் ஈடுப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஒருவர் ஐபிஎல் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IPL, IPL2019, BETTING, DELHICAPITALS, KXIP, CRICKET, COACH

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்