கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல்.. போட்டியின் முதல் பந்து?.. முதல் ரன்?.. விறுவிறுப்பான தொடக்க ஆட்டம்!
முகப்பு > செய்திகள் > Sports newsஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இன்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இதில் இந்திய அணியின் இரு முக்கிய வீரர்களான தோனியும், விராட் கோலியும் கேப்டன்களாக களமிறங்கிவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் குடும்பங்களுக்கு ஐபிஎல் முதல் போட்டியின் டிக்கெட் விற்பனைத் தொகையின் ஒரு பகுதி நிதியாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கோலியும், பார்தீவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸின் தீபக் சகர் வீசிய முதல் பந்தில் கோலி ஒரு ரன் அடுத்து ஐபிஎல் 2019 -ன் ரன் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘ரசிகனை ரசிக்கும் தலைவா’..‘கூல் கேப்டன், இப்போ தூள் கேப்டன்’.. பட்டையை கெளப்பும் வீடியோ!
- ‘சிஎஸ்கே ஆர்மி ஆர்யூ ரெடி’..‘வெளியான அதிரடி அப்டேட்’..அடுத்த சாதனையை அடிச்சுத்தூக்கலாமா!
- ‘இந்த அன்பு போதும் தலைவா’..ரசிகர்களுக்காக‘தல’எடுத்த ரிஸ்க்.. நெகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..வைரல் வீடியோ!
- அடடே! ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயிலா?
- 'முஸ்தபா...முஸ்தபா'...நாளைக்கு 'களத்துல சந்திப்போம் பா'...வைரலாகும் போட்டோ!
- 'நீங்க ஐபிஎல் நடத்துங்க,நடத்தாம போங்க'...முக்கிய முடிவை வெளியிட்ட பாகிஸ்தான்!
- 'கெட்ட பசங்க சார் இந்த சென்னை பாய்ஸ்'...'உலக அளவில் ட்ரெண்டிங்'...அதிர்ந்த ட்விட்டர்!
- தலயா? தளபதியா?.. ‘சென்னை வந்த கோலியின் படை’.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!
- 'புதுசா யார எடுக்க போறாங்க?'...சென்னை,கொல்கத்தா அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்!
- ‘ஹோம் மேட்ச் டிக்கெட் தொகை..’ புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு..CSK அறிவிப்பு!