‘இந்த 40வது சதம் எனக்கு வெறும் நம்பர்தான்.. ஆனா இந்திய அணிக்கு?’.. உணர்ச்சிமிக்க பேசிய கோலி !
முகப்பு > செய்திகள் > Sports newsஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று நிகழ்கிறது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், தங்கள் அணியின் சாய்ஸாக பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் முக்கியமான முன்வரிசை வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் தவான் மட்டும் 21 ரன்கள் எடுத்திருக்க மற்றவர்கள் அதற்கும் குறைவாகவே எடுத்தனர்.
மொத்தத்தில் 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களே எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர், அணியின் கேப்டன் கோலிக்கு கைகொடுத்து ரன் ரேட்டை துரிதமான அதிகப்படுத்த உதவினார்.
4-வது விக்கெட்டுக்குள் இந்த கூட்டணி 151 ரன்கள் எடுத்தது. இதில் விஜய் சங்கர் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அரை சதத்துக்கு வாய்ப்பின்றி அவுட் ஆகிவிட்டார்.
இப்படி அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தாலும் கோலி சற்று நிதமானமாகவே ஆடிக்கொண்டிருந்தார். எனினும் 120 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளையும் சேர்த்து 116 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். இதில் தனது 40வது சதத்தை நிறைவேற்றினார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்து, எதிரணியின் இலக்கை நிர்ணயித்தது.
தனி ஒருவராக நின்று கோலியின் நிதானமான ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபற்றி போட்டி முடிந்து பேட்டி அளித்த கோலி, தனது இந்த 40வது சதம் தனக்கு ஒரு நல்ல உள்ளுணர்வைத் தந்ததாகவும் ஆனால் தனக்கு அது வெறும் நம்பர்தான் என்றும் இந்திய அணிக்கு அது வெற்றி என்பதில்தான் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'லேட்டா வந்தாலும்...பேட்ஸ்மேன்களை ஓட விட்டவர்'...ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
- 'கோலியை அவுட் பண்ண ஐடியா கொடுத்தது'...'இந்திய ஆல்ரவுண்டர்' தான்..ஸ்ம்பா ஓபன் டாக்!
- கோலியை நெருங்கும் அதிரடி பேட்ஸ்மேன், முதலிடம் பறிபோக வாய்ப்பு உள்ளதா?
- ‘கோலி இந்த வரிசையில் இறங்குவது முட்டாள்தனமான முடிவு’.. ரவி சாஸ்திரியை கடுமையாக சாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
- இவருக்க சாதனையே முறியடிச்சிட்டாரா?...'நான் எப்போதுமே கெத்து தான்'...நிரூபித்த 'தல'!
- உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாட தடை கோரிய பிசிசிஐ.. நிராகரித்த ஐசிசி!
- 'உலககோப்பையில இவருக்கு இடம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்'...அதிருப்தியில் ரசிகர்கள்!
- 'ஆள விடுங்கடா சாமி'...நான் இனிமேல்...கிரிக்கெட் மட்டும் விளையாடிக்குறேன்!
- 'இவ்வளவு ரன் அடிச்சும் இப்படி ஆயிட்டே'... 'நாங்க தோத்ததுக்கு இது தான் காரணம்!
- இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட்?.. ஐசிசி!