ரோகித் ஷர்மா ஜெர்ஸி கலரும் ப்ளூ...காரோட கலரும் ப்ளூ! விலை எம்புட்டு தெரியுமா? வெறும் 3 கோடி தான்! அந்த வண்டி அப்படி என்ன ஸ்பெஷல் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: சுமார் 3.15 கோடி மதிப்பிலான லம்போர்கினி உருஸ் காரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வாங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

ரோஹித் ஷர்மாவின் விருப்பமான நிறமாக நீலம் உள்ளது, ஏனெனில் அவர் நீல நிற காரை வாங்குவது இது முதல் முறையும் அல்ல. அவர் ஏற்கனவே நீல நிற BMW M5 தான் தனது கனவு வாகனம் என்று ரோஹித் சர்மா பல பேட்டிகளில் கூறியுள்ளார். 1.5 கோடி ரூபாய் வரை விலையில் விற்கப்படும் இந்த BMW M5 காரினை ரோகித் ஏற்கனவே வைத்துள்ளார். 

ரோகித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பதால், நீல நிற ஜெர்சிகளை இரு அணிகளும் கொண்டிருப்பதால், நீலம் தெளிவான வண்ணத் தேர்வாகிறது. இந்த புதிய லம்போர்கினி உருஸ் மற்றும் BMW M5 தவிர, ரோஹித் ஷர்மா BMW X3, Toyota Fortuner மற்றும் அவரது முதல் கார், Skoda Laura ஆகியவற்றையும் வைத்திருக்கிறார்.

2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட லம்போர்கினி உருஸ், லம்போர்கினியின் முதல் SUV-யான 1980 களில் விற்பனையில் இருந்த லம்போர்கினி LM002  உடன் ஒப்பிடும்போது உருஸ் அதன் தோற்றத்திலும் செயல்திறனிலும் மிகவும் ஸ்போர்ட்டியர் மேலும் ஆக்ரோஷமானது. இந்த காருக்கு, 22 அங்குல நாத் டயமண்ட் கட் விளிம்புகள் மற்றும் ஸ்போர்டிவோ லெதர் இன்டீரியருடன் ப்ளூ எலியோஸ் மெட்டாலிக் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

Lamborghini Urus, ஆடி RSQ8, Bentley Bentayga மற்றும் Porsche Cayenne போன்ற சொகுசு SUVகளின் அதே தளத்தை அடிப்படையாகக் கொண்டது.  ரூ. 3.15 கோடிக்கு மேல் விற்கப்படும் உருஸ் கார், இத்தாலிய சூப்பர் கார் உற்பத்தியாளரான லம்போர்கினியால் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும்  ஆடம்பரமான வாகனங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது.

இந்த சூப்பர் கார் 4.0-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 650 PS ஆற்றலையும் 850 Nm டார்க்கையும் உற்பத்தி செய்ய வல்லது மற்றும் 8-ஸ்பீடு ZF தானியங்கி டிரான்ஸ்மிஷன் இந்த காருடன் இணைக்கப்பட்டுள்ளது. 0-100kmph வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டக்கூடியது. மணிக்கு 305 kmph வேகம் கொண்டது. 7.87 கிமீ மைலேஜ் தர வல்லது.

BCCI, IPL, ROHIT SHARMA, MUMBAI-INDIANS, INDIAN CRICKET TEAM, CAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்