'என்னை ஏன் ஒதுக்குறாங்கன்னு தெரியல'...'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க'...இந்திய வீரர் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற ரஹானே,அதன் பின்பு இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.இந்நிலையில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறித்து பேசிய அவர்,தனக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரஹானே.இவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தாலும்,ஒரு நாள் தொடருக்கான அணியில் தொடர்ந்து அவருக்கான வாய்ப்பு வழங்கப்படாமலே இருந்து வருகிறது.இது குறித்து மிகுந்த மனவருத்தத்துடன் இருக்கும் அவர் தனது தரப்பு கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிந்து கொண்டார்.

அப்போது அவர் ''நான் எப்போதுமே அணியின் நலனிற்காக மட்டுமே விளையாடுவேன்.என்னுடைய தனிப்பட்ட சாதனைக்காக நான் எப்போதுமே விளையாடியதில்லை.ஒரு விளையாட்டு வீரர் எப்போதுமே அணியில் நலனிற்கு தான் முன்னுரிமை தர வேண்டும்.அவ்வாறு விளையாடும் எனக்கு அணியில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

நான் அதிரடியாக விளையாடக்கூடியவன்.ஆனால் கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவன்.எனவே எனது பேட் தான் பதிலளிக்க வேண்டும் என எண்ணுபவன்.ஆனால் எப்போதும் அமைதியாக இருக்கு முடியாது.சில நேரங்களில் உண்மையை பேசித்தான் ஆக வேண்டும்.வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கினேன்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 4 வது வரிசையில் இறக்கப் பட்டேன்.நானும் அணியின் நலன் கருதி தேர்வு குழுவின் முடிவை ஏற்று கொண்டேன்.ஆனால் அணி நிர்வாகம் வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.அப்போது தான் ஒரு வீரரால் பயமின்றி விளையாட முடியும்.

இந்நிலையில் அணி நிர்வாகம் என்னை கைவிட்டுவிட்டதாக நான் ஒரு போதும் எண்ணியதில்லை.அது போன்ற எண்ணங்கள் வந்து விட்டால் ஒரு வீரராக எப்போதுமே ஜெயிக்க முடியாது.இதனிடையே தேர்வு குழு தலைவர்,நான் உலகக்கோப்பைக்கான பரிசீலனையில் இருக்கிறேன் என தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது.எதையும் பாசிட்டிவ்வாக எதிர்கொள்ளும் நான்,அணியில் நிச்சயம் தேர்வவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்'' என ரஹானே தெரிவித்துள்ளார்.

CRICKET, BCCI, RAHANE, AUSTRALIA ODIS

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்