"நான் பயங்கர பிரஷர்-ல இருந்தேன்.. அவர்தான் என்ன பண்ணனும்னு சொன்னாரு".. CSK பவுலர் முகேஷ் சொன்ன சீக்ரட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி, தீபக் சஹார் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் குறித்து நிகழ்ச்சியாக பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இறந்துட்டார்னு மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. பெட்டியை திறந்த ஊழியருக்கு காத்திருந்த ஷாக்..!

முகேஷ் சவுத்ரி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் தீபக் சஹார்-ன் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் சவுத்ரி. இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத்தை வீழ்த்தியது.

வழிகாட்டி

இந்நிலையில் இது குறித்து பேசிய முகேஷ் சவுத்ரி "அவர் (தீபக் சஹார்) சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். அவர் ஒரு அற்புதமான பவுலர். நான் அடிக்கடி அவருடன் பேசுவேன். அவர் எனக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். சூழ்நிலைகளை எப்படி கணிப்பது? அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி பந்து வீசுவது? என்பதை அவர் என்னிடம் பலமுறை விளக்கி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் நான் சரியாக பந்து வீசவில்லை. அப்போது தீபக் சஹார் எனக்கு பல டிப்ஸ்களை வழங்கினார்" என்றார்.

தோனியின் அறிவுரை

தீபக் சஹார் தன்னிடத்தில் பேசும்போது தோனியின் அறிவுரையை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என கூறியதாக குறிப்பிட்ட முகேஷ்," சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் நான் 4 விக்கெட்டுகளை எடுத்த பிறகு தீபக் பாய் எனக்கு போன் செய்திருந்தார். நான் நன்றாக விளையாடியதாகவும் தொடர்ந்து இப்படியே பந்துவீசும் படியும் கூறினார். பேட்ஸ்மேனை கூர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் தோனியின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார். உண்மையாகவே நான் பயங்கர அழுத்தத்தில் இருந்தேன் ஆனால் தீபக் சஹாரின் வார்த்தைகள் என்னை வெகுவாக உற்சாகப்படுத்தின" என்றார்.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள முகேஷ் சவுத்ரி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, IPL 2022, CSK, DEEPAK CHAHAR, MUKESH CHOUDHARY, சென்னை சூப்பர் கிங்ஸ், முகேஷ் சவுத்ரி, தீபக் சஹார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்