புற்று நோயால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > Sports news
By |

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ப்ரூஸ் யார்ட்லி உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான ப்ரூஸ் யார்ட்லி 1978ம் ஆண்டில் இருந்து 1983ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். அறிமுகமான வெகு சில போட்டிகளிலேயே தனது பவுலிங் ஸ்டைலை மாற்றி சுழற்பந்து வீச்சாளராக மாறினார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 126 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றில் விளையாடி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் 71 வயதான ஆஸ்திரேலியா கிரிகெட் வீரர் ப்ரூஸ் யார்ட்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

CRICKET, PLAYER, DEAD

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்