'மக்களே இந்த நாள மறக்க முடியுமா'?...'வரலாற்றில் இடம் பிடித்த சிக்சர்'...தட் வின்னிங் ஷாட்!
முகப்பு > செய்திகள் > Sports news8 வருடத்திற்கு முன்பு இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதே தேதியில் 8 ஆண்டுகளுக்கு முன்புதோனி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பல நாள் உலகக்கோப்பை கனவை நனவாக்கிய நாள் தான் இன்று.ஒரு தலைவன் உருவாகி விட்டான் என அனைவரும் ஆர்ப்பரித்த நாள் தான் இது.1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்யை வென்றது. அதன்,பின்பு 28 ஆண்டுகள் கழித்து, இந்திய வீரர்களை உலகக் கோப்பையை வாரி அணைத்து கொண்டனர்.
2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்த போதே தோனி மீது நம்பிக்கை கூடியது.இவர் நிச்சயம் 28 வருட கனவை நிறைவேற்றுவார் என பலரும் காத்திருந்தார்கள்.அதற்கு பலனாக 2011-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது தோனி தலைமையிலான இந்திய அணி.
மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என நம்பி கொண்டிருந்த ரசிகர்களுக்கு இடியாக அமைந்து இலங்கை அணியின் அபாரமான ஆட்டம்.டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி ஜெயவர்தனே சதத்துடன் 274 குவித்த போது கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் இந்திய ரசிகர்கள்.பின்பு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் தனது விக்கெட்டை பறிகொடுக்க,சச்சின் 18 ரன்களில் வெளியேற,இந்தியாவின் உலகக்கோப்பை கனவு,கனவாகவே போய்விட்டது என பலரும் டி.வி.யை ஆப் செய்து விட்டு சென்று விட்டார்கள்.அந்த நேரத்தில் காம்பீர் மற்றும் கோலி ஜோடிபொறுமையுடன் ரன்களை எடுக்க மீண்டும் ஒரு நம்பிக்கை வந்தது.அதன் பின்பு கோலி தனது விக்கெட்டை இழக்க தோனி களத்திற்கு வந்தார்.
அந்த இறுதி போட்டியின் காட்சிகள் கிரிக்கெட் பார்க்கத்தவர்களை கூட பார்க்க வைத்தது என்று சொல்லலாம்.கடைசி 2 ஓவர்களில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில்,தோனி அடித்த அந்த சிக்ஸ் புதிய வரலாற்றையே எழுதியது.'இவரை போல ஒரு சிறந்த பினிஷெர் இல்ல பா',என தோனியை வெறுப்போர்களே முணுமுணுத்தனர்.
சச்சினுக்காக இந்த உலகக் கோப்பயை நிச்சயம் வெல்வோம் என சூளுரைத்த இந்திய வீரர்கள், கோப்பையை வென்றப் பின் சச்சினை தங்களது தோள் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர்.அந்த காட்சிகள் தோனியின் பெருமையை எப்போதும் பறைசாற்றும்.அதே போன்று நிச்சயம்,கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 2019 உலகக் கோப்பையை வாரி அணைத்து கொள்ளும் என நம்புவோம்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘தொடர் தோல்வி எதிரொலி’.. ‘ஆர்சிபியில் இணைந்த பிரபல வீரர்’..கொண்டாடத்தில் ரசிகர்கள்!
- ‘தல’யிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல வீரர்.. வைரல் வீடியோ!
- சி.எஸ்.கே. வீரர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்... பிறந்தநாள் விழாவில் வைரலான வீடியோ!
- 'எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது'?...அதிரடி நடவடிக்கையில் சிக்கிய ரஹானே!
- 'இதுனால தான் 'தல'ய எல்லாருக்கும் பிடிக்குது'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!
- ‘தல மேட்சுல அடி வெளுக்க.. 7 டீமும் கப்பாவது மேட்சாவதுன்னு'... சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் CSK வீரரின் ட்வீட்!
- ‘இது மட்டும் நடக்காம போயிருந்தா’.. நூலிழையில் அவுட் ஆகாமல் தப்பிய ‘தல’தோனியின் வைரல் வீடியோ!
- ‘தலயின் தரமான சம்பவம்’.. கடைசி ஓவர் ஹாட்ரிக் 6,6,6. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!
- 'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது!
- ‘முடிஞ்சா புடிச்சு பாரு’..சென்னை மால் ஒன்றில் ஓடிய ஜிவா தோனி.. வைரலாகும் வீடியோ!