"தோனி, ரெய்னாவுக்கு நன்றி!!!"... 'அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்'... 'முன்னாள் சிஎஸ்கே வீரர் திடீர் ஒய்வு!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சுதீப் தியாகி (33) 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் விளையாடியதன் மூலமாக முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் அவர் விளையாடியுள்ளார்.

அதேநேரம் 41 உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள சுதீப் தியாகி உத்தரபிரதேச மாநில ரஞ்சி அணியிலும் இடம்பெற்றுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு பெறுவதாக சுதீப் தியாகி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், "தோனி தலைமையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முகமது கைப், ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முடிவை எடுத்தது கடினமானதுதான். ஆனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். என்னுடைய அந்த விருப்பம் நிறைவேறிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்