ஊருக்கு போக பணமில்ல, போலீசுக்கு போன் பண்ணி லிஃப்ட் கேட்ட இளைஞர்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > Inspiring news
By |

கையில் பணமின்றி தவித்துள்ள இளைஞர் ஒருவருக்கு நடந்துள்ள விநோதமான அனுபவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதை அட்டென் செய்த காவலருக்கு, அந்த இளைஞர் கூறிய விஷயம்‘இதென்னடா புதுசா இருக்கு’ என்று கிண்டல் பண்ணும் வகையில் முதலில் நகைச்சுவையாய்த் தோன்றினாலும், எமர்ஜென்சி என்று போன் பண்ணிய அந்த இளைஞரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, விபரத்தை கேட்டிருக்கிறார் காவலர்.

அப்போது அந்த இளைஞர் தன்னிடம் தன்னுடைய சொந்த ஊரான குன்னாவூருக்குச் செல்வதற்கு பணமில்லை அதனால், தான் உத்தரபிரதேசத்தில் மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அதனால் காவல்துறை தன்னை தன் ஊருக்கு லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், போதையில் அந்த இளைஞர் காவல் துறைக்கு போன் செய்து காவலர்களின் நேரத்தை வீணாக்குகிறாரா? என சோதனையிட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் தான் அப்படி எதுவும் போதை வஸ்துக்களை உண்ணவில்லை என்றும், உண்மையில் தனது ஊருக்குச் செல்ல பணமில்லை என்பதால் தன்னை தன் ஊரில் சென்று டிராப் செய்யத்தான் போலீஸின் உதவியை வேண்டியதாகவும் குறிப்பிடுகிறார்.

பின்னர் அந்த இளைஞருக்கு போலீஸார் உதவியுள்ளனர். இதனை காவலர் குழுவில் இருந்த நபர் ஒருவர் விடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

UP, POLICE, HUMANRESOURCES, VIRALVIDEOS

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்