ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மனிதநேயத்தைக் காட்டிய நூற்றுக்கணக்கான மக்கள்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > Inspiring news
By |

கேரளாவில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்த பாதையில் சில நொடிகளியேலே ஆம்புலன்ஸுக்கு வழிகொடுத்து மககள் அனுப்பி வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அம்மன் கோவிலில் வருடா வருடம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில்தான் பிரசித்தி பெற்ற மன்னார்காஅட் பூரம் என்கிற விழா, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கோலகலமாக கொண்டாடப்பட்டு பக்தர்களால் திருவிழா களைகட்டும்.

வழக்கம் போலவே இந்த வருடமும் ஏராளமான மக்கள் பெருந்திரளென கூடியுள்ளனர். கேரளாவுக்கே உரிய இசைக் கதம்பங்களுடன் விமரிசையாக நடனமாடி மக்கள் இந்த திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான், உயிரின் ஒலியைச் சுமந்துகொண்டு, ஒலியை எழ்ப்பியபடி ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கித் தடுமாறி வந்துள்ளது.

இத்தனை நூற்றுக்கணக்கான மக்களைத் தாண்டி செல்ல முடியாமல் தவித்த இந்த ஆம்புலன்ஸைக் கண்ட மக்கள், அத்தனை பேரும் உடனடியாக ஆம்புலன்ஸைக் கண்டதும் சுதாரித்தபடி, நொடிப்பொழுதில் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழியினை மனிதச் சங்கிலி அமைத்தது போல் உருவாக்கி ஆம்புலன்ஸை அனுப்பி வைத்த காட்சி அனைவரையும் உருக்கி நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம்புலன்ஸ் என்பது சாலையில் செல்லும் ஒரு வாகனம் அல்ல, இந்த பூமிப் பாதையில் செல்லும் ஒரு உயிரின் வழி என்பதை உணர்ந்து அவ்வுயிருக்கு மதிப்பு கொடுத்து விலகிய உன்னதமான கேரள மக்களின் உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

VIRALVIDEOS, KERALA, AMBULANCE, HUMANITY

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்