தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் மனைவிக்கு ராணுவத்தில் கிடைத்த உயர்பதவி!

முகப்பு > செய்திகள் > Inspiring news
By |

கடந்த செப்டம்பர் மாதம் தேசிய இன தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஷிஷிர் மால் பலியாகினார். 

காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள பாரமுல்லா செக்டரில் 2 வருடங்கள் பணியாற்றிய ஷிஷிர் மால், முன்னதாக தனது வீரதீர செயல்களுக்காக கடந்த 2016-ஆம் வருடம் சேனா விருது பெற்றவர்.இந்நிலையில் இந்திய தேசத்துக்காக பலியான இந்த ராணுவ வீரரின் மனைவி சங்கீதா மாலுக்கு ராணுவத்தில் உயர் பதவிக்கு பயிற்சி அளிக்கப்பட்டதோடு, அவர் அந்த பணியில் தற்போது அமர்த்தப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர் ஷிஷிர் மாலுக்கும், அவரது மனைவி சங்கீதா மாலுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது. அந்த சமயம் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துவந்த சங்கீதா மால், தன் கணவர் உயிரிழக்கும்போது தனது கனவுப்பணியான ஆசிரியப் பணியை கைவிட்டார். இதனையடுத்து ராணுவத்தில் சேருவதற்கான முழு தகுதியும் ஆர்வமும் பெற்றிருந்த சங்கீதா மாலுக்கு  ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த அகாடமியில் பயிற்சி நிறைவு பெற்று, சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சிக் கல்லூரிலிருந்து நேற்றைய தினம், சங்கீதா மால், ஆர்மி லெப்டினென்ட் எனப்படும் உயரிய ராணுவ துணைத்தளபதி பதவியைப் பெற்றுக்கொண்டு வெளியேறினார்.  விரைவில் அவர் பணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ARMY, SANKEETAMALL

OTHER NEWS SHOTS