ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை 1.5 கிமீ தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ் கான்ஸ்டபிள்!
முகப்பு > செய்திகள் > Inspiring newsரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை தோளில் தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் பிலோர் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் பகுதியில் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்ததாகவும், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்ததும், ரோந்து பணியில் இருந்த பூனம் பிலோர் என்பவர், போலீஸ் டிரைவருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.
ஆனால் ரயிலில் இருந்து விழுந்து அடிபட்டதால் ரயில்வே டிராக்கிலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை, அப்பகுதிக்குள் ஆம்புலன்ஸ் நுழைய முடியாத காரணத்தால் காப்பாற்ற முடியாமல் அனைவரும் திணறியுள்ளனர். அப்போது சம்பவ இடத்துக்கு போன பூனம் பிலோர், ரத்தம் சொட்டச் சொட்ட அடிபட்ட இளைஞரை காப்பாற்றும் நோக்கில் தன் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மருத்துவமனை சென்று சேர்த்துள்ளார்.
இளைஞர் தவறி விழுந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரைக் கி.மீ தொலைவில் இருந்த ரயில் நிலையம் வரை இளைஞரை தோளில் தூக்கிக்கொண்டு வந்தடைந்த போலீஸ் கான்ஸ்டபிள், அங்கிருந்து பாதிக்கப்பட்ட இளைஞரை காரின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சியோனி - மால்வா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட இளைஞரான அஜித் (20) என்பவரை சேர்த்த பின்னர், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேற்கொண்டு சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் கான்ஸ்டபிள் பூனம் பிலோர் செய்துள்ள இந்த காரியம் பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS