‘ஓட்டு கேட்க போகும்போது பாஜக தொண்டர்கள் எப்படி போகணும்?’.. தமிழிசையின் பதில்!

முகப்பு > செய்திகள் > India news
By |

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்முன் எங்களிடம் என்ன வார்த்தை சொன்னார் என்பதை  பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தாமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர், அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், தமிழகம் வரவுள்ளனர். நல்ல திட்டங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக “மீண்டும் மோடி; வேண்டும் மோடி”’ என்று தமிழிசை கூறினார்.

மேலும், 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்முன் எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னார். அதாவது 2019 ஆம் ஆண்டு ஆட்சி முடிந்து மீண்டும் மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் போது பாஜக தொண்டர்கள் தலை குனிந்து செல்லக்கூடாது. தலை நிமிர்ந்து செல்ல வேண்டும் எனக் கூறியதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நாங்கள் இப்போது பாஜக அரசு செய்த நலத்திட்டங்களை முன்வைத்து, தலை நிமிர்ந்து ஓட்டு கேட்போம். மேலும் எவ்வளவுதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் நாங்கள் அதை முறியடித்து இன்னும் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்