‘இப்படியும் பண்ணுவாங்க.. அதிகாரிகளே கவனம்’.. ரூபா ஐபிஎஸ் வெளியிட்ட வைரல் ‘சப்பாத்தி’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அன்று முதல் தீவிர வாகன சோதனைகள் உள்ளிட்ட பல தேர்தல் விதிகளுக்குட்ப்பட்ட நடத்தை முறைகளும் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 11-ஆ தேதி தொடங்கி மே 19-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடக்கவுள்ள இந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு வாகன சோதனைகளின் மூலம் ரூ.600 கோடி பணம், இலவச பொருட்களை கைப்பற்றினர். இவற்றுள் ரூ. 71 கோடி பணம் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம்.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர வைக்கும் வீடியோ ஒன்றினை பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில் வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிகாரிகளின் கண்ணுக்கு புலப்படாத வகையில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பார்கள் எனவும் அதற்கென சில பிரத்தியேகமான நூதன வழிமுறைகளை பயன்படுத்துவார்கள் எனவும் கூறியுள்ளார்.

அதாவது வாக்காளர்களை வசப்படுத்துவதற்கென அவர்கள் கையாளும் முறைகள் இதுபோன்றும் இருக்கலாம், என்று சொல்லி, ஒரு பெண் 2000 ரூபாய் நோட்டை சப்பாத்திக்குள் ஒளித்து வைத்து, அந்த சப்பாத்தியை தயாரிக்கும் வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, சம்மந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

LOKSABHAELECTIONS2019, ELECTIONCOMMISSION, ROOPAIPS, VIRALVIDEO, VOTER

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்