எழுந்து நின்று, கைத்தட்டி, வணக்கம் வைத்த பயணிகள்.. நெகிழ்ந்துபோன அபிநந்தனின் பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > India news
By |

ஜெய்ஷ்-இ-அகமது அமைப்பு புல்வாமாவில் தாக்குதல் செய்ததைத் தொடர்ந்து இந்தியா பதிலடி தாக்குதல் செய்தது. இதனிடையே பாகிஸ்தானில் இந்திய துணை நிலை ராணுவ விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் வீடியோக்களை வெளியிட்டனர். எனினும் அவரை மீட்டு வரவேண்டும் என்பது ஏகோபித்த இந்திய மக்களின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது.

வீடியோக்களில் பேசிய அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவம் தன்னை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், தனது நாட்டு ராணுவமும் இதுபோன்று இருப்பதையே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டதோடு, தான் அருந்தும் டீ நன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இருநாடுகளுக்கிடையேயான அமைதியை விரும்பும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தானின் வசமுள்ள இந்திய ராணுவ விமானி அபிநந்தன் நிபந்தனைகளின்றி இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதன் அடுத்தகட்டமாக இந்திய தூதரக அதிகாரிகள் அபிநந்தனை மும்பை அல்லது டெல்லி விமானநிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறார் என்கிற சூழலில், தங்களுடைய மகனை வரவேற்பதற்காக அபிநந்தனின் தந்தையும் ஏர் மார்ஷலுமான வர்த்தமன்,  தாய் ஷோபனா ஆகியோர் நேற்று இரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.  

அவர்கள் சென்ற விமானத்தில் அபிநந்தனின் தந்தை வர்த்தமன் மற்றும் தாயார் ஷோபனா உள்ளிட்டோருக்கு அங்கிருந்த விமானப்பயணிகள்  மனதார எழுந்து நின்று வரவேற்பு அளித்து, மரியாதையுடன் கைத்தட்டியும், வணக்கம் செலுத்தியும் அனைவரும் ஆரவாரத்துடன் இருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அபிநந்தனின் தாத்தா சிம்மக்குட்டி இரண்டாம் உலகப்போரின்போது போர் ராணுவ விமான அதிகாரியாக இருந்துள்ளார். பரம் வைசிஸ்ட் சேவா மெடல் பெற்ற ராணுவ அதிகாரி வர்த்தமன் தனது மகன் அபிநந்தன் அத்தனை துணிச்சலாக பேசுவதை பார்த்தது தங்களுக்கு பெருமையாக இருந்ததாகவும், அவர் ஒரு உண்மையான படைவீரர் என்றும் அவர் மீண்டு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ABHINANDANRELEASE, ABHINANDANRETURNS, WELCOMEBACKABHINANDAN, AIRSURGICALSTRIKES, ABHINANDANVARTHAMAN

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்