காட்டில் தவித்த 6 வார சிறுத்தைக் குட்டி.. தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை.. உணர்வுபூர்வமான வீடியோ காட்சி!
முகப்பு > செய்திகள் > India newsகரும்புத்தோட்டத்தில் சிக்கித்தவித்த சிறுத்தைக் குட்டியை அதன் தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு கரும்புத்தோட்டத்தில் பிறந்து 9 வாரங்களே ஆன சிறுத்தைக் குட்டி ஒன்று தாயை பிரிந்து தவித்துள்ளது. சிறுத்தைக் குட்டி கத்தும் சத்ததைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கரும்புத் தோட்டத்தில் இருந்த சிறுத்தைக் குட்டியை மீட்டனர். பின்னர் பாதுகாப்பாக ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள் வைத்து மீண்டும் அதே கரும்புத் தோட்டத்தில் வைத்து தாய் சிறுத்தை வருவதற்காக நள்ளிரவு வரை வனத்துறையினர் காத்திருந்தனர்.
இதனை அடுத்து சிறுத்தைக் குட்டியின் சத்தம் கேட்டு தாய் சிறுத்தை அந்த இடத்திற்கு வந்துள்ளது. பெட்டிக்குள் இருக்கும் சிறுத்தைக் குட்டியைப் பார்த்ததும் தாய் சிறுத்தை பெட்டியைத் தட்டிவிடுகிறது. பெட்டியின் மூடி திறக்கப்பட்டதும் வெளியே விழுந்த சிறுத்தைக் குட்டியை தாய் சிறுத்தை தன் வாயால் கவ்விக்கொண்டு செல்கிறது. இந்த காட்சிகளை வனத்துறையினர் ஒரு கேமராவில் பதிவு செய்துள்ளனர். இந்த நெகிழ்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்