உலகப்பெண்கள் தினம் முதல் சானிட்டரி நாப்கின் வழங்கும் இந்தியாவின் முதல் விமானம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

விஸ்தாரா விமான நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து பலரது பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக பெயர்பெற்றது.

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு நிறுவனமான இந்த நிறுவனம் வரும் மார்ச் 8-ஆம் தேதி முதல் விமானத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கவிருப்பதாக புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதி பெண் பிறப்பை மதிக்கும் வகையிலும், பெண்களின் உளவியல் சார்ந்த எண்ணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் பல நிறுவனங்களும் புதிய சலுகைகளையோ திட்டங்களையோ அறிவிப்பது வழக்கம்.அவ்வகையில் பெண்களுக்கு உதவும் வகையில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின் இனி தம் விமானத்தில் வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் கோடைகாலம் முதலே இந்திய விமான நிலையங்களில் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விமானத்துக்குள் பயணிக்கும்போது இந்த சேவையை அளிக்க விஸ்தாரா  நிறுவனம் தற்போது முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசியுள்ள இந்நிறுவன அதிகாரி தீபா சந்தா, நாம் செய்யும் சிறிய விஷயம் கூட பின்னாளில் ஒரு மாற்றத்துக்கு அடியாக அமையும் என்றும் அப்படியொரு நல்ல மாற்றத்துக்கான முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இத்தகைய முடிவினை எண்ணி ஒரு பெண்ணாக தான் பெருமை கொள்வதாகவும் கூறுகிறார்.

PADSONBOARD, VISTARAFORWOMEN, VISTARAWOMANFLYER, WOMENSDAY, NOTJUSTANOTHERAIRLINE

OTHER NEWS SHOTS