‘மார்ஃபிங் பண்ணி ட்ரெண்ட் பண்றாங்க... எதிர்க்கட்சி வேட்பாளர்தான்’.. பாய்ந்த பாமக வேட்பாளர்!

முகப்பு > செய்திகள் > India news
By |

பாமகவின் சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் வேட்பாளர் சாம் பால், பத்திரிகையாளர் சந்திப்பில், பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கும் பாமகவின் சார்பாக 8 நாட்களாக பிரச்சாரம் செய்துவரும் சாம் பால், மழை மற்றும் தண்ணீர் பிரச்சனைகளை மக்கள் முன்வைப்பதாகவும், பாமக வின் முக்கிய குறிக்கோளான நாம் விரும்பும் சென்னை கனவுத் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பை பற்றி பேசி வருவதாகவும் பேசியுள்ளார்.

மேலும் தூய்மையான அரசியலை செய்யும் நோக்கில் எதிர்க்கட்சியினரை பற்றி தான் எதுவும் சொல்லாத நிலையில், தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் எதிர்க்கட்சியினர் அவதூறாக பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2016ல் தன்னைப் பற்றி வந்த நாளிதழ் செய்தியில் இருக்கும் புகைப்படத்தை மார்பிங் செய்து எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ஜிம் வைத்திருப்பதால், கையில் தம்பிள்ஸ் வைத்திருப்பதுபோல் இருக்கும் தன் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பாமகவின் மதுவிலக்கு நாடகம் அம்பலம் என்று அவதூறு பரப்புவதாகவும், தான் போட்டியிடும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளருடன் தொடர்புடையவர்கள்தான், ஒரு டீ-டோட்டலரான தன்னை பற்றி இவ்வாறு அவதூரு செய்திகளை பரப்புவதாகவும் அவருடைய செயல்களுக்கான ஆதாரங்கள் பேஸ்புக்கில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி தேர்தல் ஆணையத்திலும், கமிஷனர் ஆணையத்திலும் புகார் அளிக்கவுள்ளதாக கூறியவர், அந்த எதிர்க்கட்சியின் வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் என்றும், அவர் மீதுதான் புகார் அளிப்பதாகவும் கூறியவர், தான் தன் நண்பர்களுடன் இருக்கும் தனித்த படங்களை தனது பேஸ்புக்கிலிருந்து எடுத்து மார்ஃபிங் செய்து ட்ரெண்ட் ஆக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் படித்தவர்கள் அரசியலுக்குள் நுழைய முடியாத சூழல் உருவாகிறது என்றும் கூறியுள்ளார்.

LOKSABHAELECTIONS2019, PMK, AIADMK, SAMPAUL, DHAYANITHIMARAN

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்