'தாக்குதல் நடத்த திட்டம் போட்டாங்க' ...சொல்லி பாத்தோம் கேக்கல...உள்ள புகுந்து அடிச்சோம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை வீசியுள்ளது.இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் எல்லைத் தாண்டிய தாக்குதல் குறித்து வெளியுறவு செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் விளக்கினார்.அப்போது ''சமீபத்தில் உளவுத்துறை அளித்த தகவலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நமது நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதற்காக ஜிஹாதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இது தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு  அனுப்பினோம். ஆனால் தீவிரவாத முகாம்களை அழிக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவர்கள் தாக்குதல் நடத்துவதுக்கு முன் நாம் நம்மை தற்காத்துக்கொள்வது முக்கியம். எனவே இந்த அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தியது.இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது.

மேலும் இந்திய விமானப்படையின் இந்த அதிரடி தாக்குதல் குறித்து குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்